கொள்கைகள்
கொள்கைகள்
- 1. வல்லரசு கட்சி தனி மனித உரிமையும்,நலனையும் அவரது மகிழ்வு மற்றும் கொண்டாட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
- 2. தனி மனித அடிப்படை தேவைகளை சந்திப்பது நம் கட்சியின் தலையாய கொள்கையாகும்.
- 3. இக்கட்சி இந்தியாவில் துவங்கப்பட்டிருந்தாலும் உலக மக்கள் அனைவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 4. இந்தியப் பெருநாட்டில் இன்று துவங்கப்பட்ட நம் வல்லரசு கட்சி மக்களின் நலனில் மட்டுமே அக்கறைக் கொண்டு மக்களுக்காக சேவை செய்ய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
- 5. வல்லரசு கட்சியில் உருவாக்கப்படும் காணொளிகள் யாவும் மக்களின் நலன் கருதி மக்களுக்காக பேசப்பட்ட அல்லது செய்யப்பட்ட காரணிகளாகவே அமையும்.
- 6.மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லாத் தகவல்களையும் காணொளி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் தலையாய கடமையாக இருக்கும்.
- 7. வல்லரசு கட்சி சார்ந்த இணையதளம் மற்றும் சமூக ஊடக பதிவுகளுக்கு,மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப்படும்.
- 8.தனிமனித வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட நம் கட்சி தேர்தலை சந்தித்து அதில் வெற்றிப் பெற்றால், தன் கொள்கையிலிருந்து வழுவாது அதிலேயே பயணித்து அதில் வெற்றியும் பெறும் என்று உறுதியளிக்கிறோம்.
- 9.தொண்டு அல்லது சேவை என்ற பெயரில் போலியாக மக்களை ஏமாற்றாமல் தகுதியான ஊதியம் பெற்று இதை ஒரு பணியாகவே மேற்கொள்வோம்.
- 10. இவ்வுலகமும்,உலகம் சார்ந்த அனைத்து உயிர்களும்,உன்னதமாக வாழ வல்லரசு கட்சி அனைத்து நிலைகளிலும் முயற்சி மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறோம். இதில் மக்களாகிய நீங்களும் இணைந்து,இசைந்து செயல்பட உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.
கட்சி
நிர்வாகம்
தலைவர்